மறுபடியும் பிசியாகிவிட்டார் இளையராஜா. இந்தியில் நான்கு படங்கள், கன்னடம், தெலுங்கில் இரண்டு படங்கள், தமிழில் சுமார் எட்டுப் படங்கள் என்று மறுபடியும் அவர் காட்டில் இசை மழை. தற்போது திருவிதாங்கூர் பகுதியில் உள்ள படகு வீட்டில் கம்போசிங் செய்துவருகிறாராம். வழக்கமாக கம்போசிங் விஷயங்களுக்காக தனது அறையை விட்டு வெளியே வராத ராஜா, முதன் முறையாக அவுட்டோ ரில் இந்தப் பணியைச் செய்துவருவது ஆச்சர்யம் என்கிறார்கள்.
இதற்கிடையில் 'நான் கடவுள்' ரீரெக்கார்டிங்கிற்காக இளையராஜாவிடம் டபுள் பாசிட்டிவ் போட்டுக் காண்பித்தாராம் பாலா. படத்தைப் பார்த்து வியந்த ராஜா, 23 நாட்கள் பின்னணி இசைக்கு ஒதுக்க வேண்டும் என்றாராம். அது மட்டுமல்ல, ஒரே நேரத்தில் உட்கார்ந்து முடித்துக் கொடுக்கிறேன் என்றும் அதுவரை பொறுத்துக்கொள் என்றும் கூறியிருக்கிறாராம்.
|