வசூல்ராஜாவுக்குப் பிறகு கமல்ஹாசனை வைத்துப் படம் இயக்க விரும்பிய இயக்குநர் சரண், சுமார் இரண்டு கோடி ரூபாயை அவரிடம் அட்வான்சாகக் கொடுத்திருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க விரும்பாத கமல் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதில் மெத்தனம் காட்டினார்.
 பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திற்குப் போனது. அவர்கள் அழைத்துப் பேசியும் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்தடிக்க, கடைசியில் கோர்ட்டுக்குப் பேதவதாக முடிவெடுத்தார் சரண். திடீரென்று பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாம். பணத்தைத் திருப்பித் தர ஒப்புக்கொண்ட கமல், சரண் எந்த பைனான்சியரிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுத்தாரோ, அவரிடமே நேரடியாகப் பணத்தை செட்டில் செய்துவிதட்டாராம்.
தோளில் இருந்த பாரம் இறங்கியதால் நிம்மதிப் பெருமுச்சு விடுகிறார் சரண்.
|