தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இராம நாராயணன் வெற்றிக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவது குஷ்புவின் வெற்றியைதான். செயற்குழு உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிட்ட அவர், அப்பதவிக்காக நின்றவர்களில் அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
இதைப் பாராட்டும் பலர், தேர்தல் தினத்தன்று காலையில் இருந்து மாலை வரை வாசலிலேயே நின்று ஓட்டு கேட்டார் குஷ்பு. அதனால்தான் இந்த மாபெரும் வெற்றி என்கிறார்கள். வெற்றி பெற்ற குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி.யுடன் வந்திருந்து தலைவர் இராம நாராயணனுக்குப் பொன்னாடை போர்த்தி ஆசிர்வாதம் பெற்றார்.
பொதுவாகப் பிரச்சினைகளை பற்றி விவாதம் செய்யும்போது செயற்குழு உறுப்பினர்களும் அதில் ஈடுபடுவார்கள். குஷ்புவும் இந்த கலாட்டாவில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். நல்லவேளையாக அவருக்கு இன்னொரு பெண் துணை கிடைத்திருக்கிறார். அவர், நாசரின் மனைவி கமீலா நாசர். எதிரணியில் போட்டியிட்டாலும் வெற்றிக்குப் பின் இவரையும் பாராட்டினார்கள் இராம நாராயணன் குழுவினர்.
|