நீண்ட நாள் திட்டம் அது. கலைஞர் கதை வசனத்தில் பிரசாந்த் நடிப்பது. கடந்த முறை கலைஞர் ஆட்சியிலேயே அது பற்றிப் கொஞ்சமாகக் காலம் கனிந்து இப்பேததுதான் அமைந்திருக்கிறது.
பிரபல வார இதழ் ஒன்றில் கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் கதையை இப்போது படமாக்கவிருக்கிறார்கள். அதில்தான் பிரசாந்த் நடிக்கிறார். தயாரிப்பு, தியாகராஜன். தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் கலைஞரிடம் சென்று ஆசி பெறுவது பிரசாந்தின் வழக்கம். அப்போதெல்லாம் இந்தப் படம் பற்றி நினைவுபடுத்திவிட்டு வருவாராம் தியாகராஜன்.
தற்போது உளியின் ஓசை திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாத் தரப்பு மக்களும் விரும்புகிற படமாகவும் இருப்பதால் முன்னைவிடத் தெம்பாகக் களத்தில் இறங்க முடிவு செய்திருக்கிறார்கள் கலைஞரும், தியாகராஜனும். படத்தின் துவக்க விழாவைப் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறாராம் பிரசாந்த்.
|