|
'வெற்றி நிச்யம்' இந்த தலைப்பில் முற்றிலும்
புதுமுகங்களுடன் கோடம்பாக்கத்தில் ஒரு படம் தயாராகி
வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி
டைரக்ட் செய்வது மட்டுமில்லாமல், இதில் ஹீரோவாக நடித்து
வரும் பால்ராஜ் என்ன சொல்ல வருகிறார்.....
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியை விடுவிக்கக்கோரி,
ஒரு வழக்கறிஞரின் போராட்டமும், அதனால் அவரது
வாழ்க்கையில் நடைபெறும் சம்பவத்தையும் கதையாக உருவாக்கி
உள்ளேன். ஒரு கட்டத்தில் அந்த வழக்கறிஞரின் உயிருக்கே
நாள் குறிக்கப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்கு அவர்
போராடும் நிகழ்வுகளை பரபரப்பான திரைக்கதையின் மூலம்
சொல்லப்போகும் படம் இது. காட்சி துவங்கியதிலிருந்து
முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.
இப்படத்தின் கதையில் நடிக்க பல முன்னணி
நட்சத்திரங்களிடம் முயற்சி செய்து, அது முடியாமல்
போனதால் நானே ஹீரோவாக நடிப்பதென்று முடிவு
செய்துவிட்டேன்.
கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவமுள்ள கேரக்டரில்
சினேகா சர்மா என்ற புதுமுகத்தை நாயகியாக
அறிமுகப்படுத்தி உள்ளேன். இவர்களுடன் ரவிச்சந்திரன்,
அலெக்ஸ், பாலு ஆனந்த், அனுமோகன் இன்னும் பலர்
நடிக்கின்றார்கள். முதல் கட்டப்படப் பிடிப்பு
சென்னையில் முடிந்தவுடன், அடுத்த கட்டப்படப் பிடிப்பை
கோவையில் தொடங்க உள்ளோம் என்றார் அவர். |