தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
'சினேகா - நமீதாவை' பார்க்க கூட்டம்! சினிமா செய்திகள்
செ.பா  
ராகவ லாரன்ஸ் மாறுபட்ட நாயகனாக பாத்திரமேற்கும் 'பாண்டி' படத்திற்காக திண்டுக்கல்லில் நெஞ்சை நெகிழ வைக்கும் பரபரப்பு க்ளைமாக்ஸ் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் படத்திற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. முப்பதடிக்கும் மேற்பட்ட அளவில் கம்பீரமான ஐயனார் சிலையும் நிர்மாணிக்கப்பட்டது. ஏராளமான கடைகள், ரங்கராட்டினம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் என்று நிஜதிருவிழா மாதிரியே அப்பகுதி அமர்க்களப்பட்டது. ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்கள். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குழுமி இருந்தனர். சினேகா - நமீதா மீதுள்ள 'கிரேஸில்' அக்கம் பக்கம் கிராமத்திலிருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மக்கள் திரண்டிருந்தனர். அதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே போலீஸ் உதவியுடன் நெரிசலை சமாளித்தார்கள். பலத்த போலீஸ் பந்தோபஸ்தும் போடப்ட்டதாம்.

அங்கு ராகவ லாரன்ஸ், சினேகா, நமீதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர் நடிகைகள் பங்குபெற்ற க்ளைமாக்ஸ் காட்சி படமானது. இதுவரையில் தமிழ்த் திரையுலகில் இடம்பெறாத மாதிரியான புதுமையான வித்தியாசமான க்ளைமாக்ஸ். "இது நெடுங்காலத்திற்கு திரையுலகில் பேசப்படும் உச்சக்கட்ட காட்சியாக இருக்கும்" என்கிறார் படத்தின் இயக்குநர் இராசு மதுரவன்.

இதுவரை பல படங்களில் நடித்திருக்கும் ராகவ லாரன்ஸுக்கு இப்படம் குறிப்பிடத் தகுந்த படமாக இருக்கும். பல்வேறு கெட் அப்களில் வந்து காமெடி, சென்டிமெண்ட், லவ் என்று பல ரூட்களில் தூள் கிளப்பி இருக்கிறாராம். படத்தில் இவருக்கு சினேகா, நமீதா என்று இரண்டு ஜோடிகள் நடிப்பிலும் கவர்ச்சியிலும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். சினேகா இதுவரை கவர்ச்சியாக நடித்ததில்லை. ஆனால், இப்படத்தில் சினேகா தாராளம் காட்டி, கிளுகிளுப்பாக கிளாமர் விருந்து தந்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தர உள்ளார்.

ராகவ லாரன்ஸ், சினேகா, நமீதா, நாசர், சரண்யா, கஞ்சா கருப்பு, ஸ்ரீமன், இளவரசு, ராஜ்கபூர், வையாபுரி, மயில்சாமி மற்றும் பலர் 'பாண்டி' படத்தில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வரும் இராசு மதுரவன் ஏற்கனவே பிரசாந்தை வைத்து ஆசையில் ஓர் கடிதம் என்ற படத்தை இயக்கியவர்.

மேலும் April 17th, 2008
 
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 13th May 2008: Kolkata vs Delhi
Live Commentary Starts at 20:00 IST
Kolkata
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy