|
''மனுநீதி',
'சவுண்ட் பார்ட்டி', 'காசு இருக்கனும்' போன்ற படங்களை
தயாரித்துள்ள ஜி ஆர் கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் முரளி
- விஷ்வா இருவரையும் வைத்து 'எங்க ராசி நல்ல ராசி'
என்ற படத்தை தயாரிக்கிறார்கள். ரவிராஜா இயக்கும்
இப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது:- கோடீஸ்வர
தொழிலதிபர் எஸ் வி சேகரின் மகளான சாருலதாவை திருமணம்
செய்து கொள்ள பெரிய பணக்காரர்கள் எல்லாம் போட்டி
போடுகிறார்கள். அதேசமயம் அவரிடம் வேலை பார்க்கும் முரளி,
விஷ்வா இருவரிடமும் ஒருத்தருக்கு தெரியாமல்
இன்னொருவரிடம் "என் பெண்ணை உனக்குக் கல்யாணம் செய்து
தருகிறேன்" என்று ஆசைக்காட்டி அவர்களிடம் வேலை
வாங்குகிறார். அதை நம்பி முரளி, விஸ்வா இருவரும் எஸ்
வி சேகர் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்கிறார்கள்.
அவர்களை ஏமாற்றும் விதமாக சாருலதாவை அமெரிக்க
மாப்பிளைக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு
செய்கிறார் எஸ் வி சேகர். அதைக் கண்டு அதிர்ச்சியடையும்
முரளி, விஷ்வா இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது
தெரிகிறது. இருவரும் இணைந்து எஸ் வி சேகருக்கு பாடம்
புகட்ட நினைக்கின்றனர். கடைசியில் சாருலதாவை
கைப்பிடித்தது யார் என்பதற்கான விடைதான் 'எங்க ராசி
நல்ல ராசி' படம். தேவா இசையமைப்பில் மூன்று பாடல்கள்
பதிவாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தேவா
இப்படத்தில் ஒரு கானாப் பாடலை பாடியுள்ளார். படத்தின்
தயாரிப்பாளர் ஜி ஆர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மே 5-ம் தேதி படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது
என்றார் ரவிராஜா. |