'இதுவரை புதுமுகங்களை மட்டுமே வைத்து படமெடுத்து வந்தார் 'தூத்துக்குடி'
பட இயக்குநர் சஞ்சய் ராம். முதல்முறையாக நட்சத்திர
நடிகர்களை வைத்து இயக்கி தயாரிக்கும் படத்தின் பெயர் 'சிவமயம்'
இப்படம் பற்றி அவர் கூறியதாவது:-இதுவரை
தென்மாவட்டங்களை கதைக்களமாக கொண்டு படங்களை இயக்கி
உள்ளேன். இந்த 'சிவமயம்' படம் சென்னை மற்றும் கோவையில்
நடக்கும் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டது. பிரகாஷ்ராஜ்
- ஷாம் இருவரும் இணைந்து நடிக்கும் முதல்படம்.
சென்னையில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச்
சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின்
திரைக்கதையை எழுதினேன். ஷாம் இதில் மூன்று விதமான
கெட்டப்புகளில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜுவிடம் கதை
சொல்லி முடித்ததும் சிவமயத்தில் நடிக்க உடனடியாக
ஒப்புக் கொண்டார்.
ராமகிருஷ்ணா' என்ற படத்தில் நடித்த ஸ்ரீதேவிகா,
இதில் 'பூவரசி' என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு பிறகு ஸ்ரீதேவிகா தமிழில் பெரிய ரவுண்ட்
வருவார். 'சைடு டிஷ்' சரசு என்ற கிளாமர் கேரக்டரில்
மேகா நாயர் கலக்கியுள்ளார். துரோணாச்சாரியாரைப்
போன்ற கேரக்டரில் பிரகாஷ் ராஜும், அர்ஜுனைப்போன்ற
கதாபாத்திரத்தில் ஷாமும் நடிக்கிறார்கள். 'ஷேத்ரம்
குருஷேத்ரம்'... என்ற பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம்
மூச்சுவிடாமல் ஒரே தம்மில் பாடியுள்ளார் என்றார்
இயக்குநர் சஞ்சய் ராம். |