|
தடயமே இல்லாமல் நடக்கும் கொலைக்குக் காரணமானவர்களைக்
கண்டுபிடிக்க ஒரு இளம் போலீஸ் அதிகாரியைச் சுற்றி
நடக்கும் சம்பவங்களை காதல், மோதல், காமெடியுடன்
தயாராகும் படத்தின் பெயர் 'யாரோ'. இப்படத்தில்
அமெரிக்காவில் வாழும் ராகேஷ் என்பவர் நடிக்கிறார்.
விமான பெண் பைலட்டான அமிவாட்சன் கதாநாயகியாக நடிக்க
லண்டனைச் சேர்ந்த விவேக்ஜி, விக்ரம் போன்ற புதியவர்கள்
இப்படத்தின் மூலம் கலக்க உள்ளார்களாம்.
ஸ்ரீஜே என்ற புதியவர் இயக்கும் இப்படத்தின் முதல்
பாடல் பதிவு ஏவிஎம் ஸ்டூடியோவிலுள்ள ஜி தியேட்டரில்
நடைபெற்றது.
ஜே ஜேன்னு கூடுது.............
ஓஹோன்னு வாழுது...............
ராகம் புதுராகம்........ என்ற பாடலை மகாகவி
பாரதியாரின் பேரன் அபிலாஷ் பாட, எஸ் என் வித்வேஸ்வர்
இசையில் பாடல் பதிவானது. இது ஒரு குறுகிய கால
தயாரிப்பில் வெளிவர உள்ளது. |