'அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற
படங்களை இயக்கியுள்ள விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா
ஹீரோவாக நடிக்கும் படத்தின் பெயர்தான் 'அலிபாபா'.
பட்டியல் சேகர், சஞ்சீவ் கபூர் இணைந்து தயாரிக்கும்
இப்படத்தை நீலன் கே சேகர் என்பவர் இயக்குகிறார்.
இப்படம் பற்றி அவர் கூறுகையில், 'அலிபாபா' படத்தின்
ஹீரோ கிருஷ்ணா. மணிரத்னத்தின் 'அஞ்சலி' படத்திலும்,
மற்றும் 'இருவர்' படத்திலும் குழந்தை நட்சத்திரமாக
நடித்தவர். அதோடு, சந்தோஷ் சிவன் இயக்கி 'டெரரிஸ்ட்'
படத்திலும் கதாநாயகனாக நடித்தவர் இவர். அதன் பிறகு
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று, அங்கு நடிப்பு
பயிற்சி பயின்று வந்தார்.
மும்பையைச் சேர்ந்த ஜனனி என்பவரை கதாநாயகியாக
அறிமுகப்படுத்தியுள்ளோம். 'அலிபாபா' என்பது
ஹீரோவின்பெயர் கிடையாது. அதற்கு அதிர்ஷ்டக்காரன் என்று
புதிதாக அர்த்தம் சூட்டியுள்ளோம். இப்போது பெரும்பாலான
செய்தியாக இருப்பது பெண்களுக்கு இழைக்கப்படும்
தொல்லைகள் பற்றிதான். சமூகத்தை ddஅச்சுறுத்தக்கூடிய
இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட
படம்தான் 'அலிபாபா' படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்
முடிவடைந்துவிட்ட நிலையில், பாடல்காட்சிகள் மட்டும்
எடுக்க உள்ளோம். ஜுன் இரண்டாவது வாரம் இப்படத்தை ரிலீஸ்
செய்யும் ஐடியாவில் உள்ளோம் என்றார் இயக்குநர் நீலன்
கே சேகர். |