'ஜி
ஏ இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் காயத்ரி
தயாரிக்கும் புதிய படம் பிரம்மாண்டம். நீலகண்டா என்ற
பெயரில் கன்னடத்திலும், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு
இரண்டு மொழிகளிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய
வெற்றிப் படமான நீலகண்டா படத்தின் தமிழ்ப் பதிப்பே இது.
பருவராகம் படத்தில் நடித்த ரவிச்சந்திரன் கதாநாயகனாக
நடிக்கும் பிரம்மாண்டம் படத்தில் நமீதா கதாநாயகியாக
நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீதேவிகா
நடிக்கிறார். அகத்தியன் இயக்கிய 'ராமச்சந்திரா'
படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். ரவிச்சந்திரன்,
நமீதா, ஸ்ரீதேவிகா தவிர சீதா, சுஜாதா மற்றும் முன்னணி
கலைஞர்கள் பலர் நடிக்கிறார்கள்.
பிரம்மாண்டம் படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நமீதா.
அவர் எந்தப் பொருள் மீது ஆசைப்பட்டாலும் அதை உடனே
அடைந்துவிடவேண்டும என்று நினைக்கிற நமீதா,
ரவிச்சந்திரனோ ஸ்ரீதேவிகாவை மணந்து கொள்கிறார். தனக்கு
ரவிச்சந்திரன் கிடைக்காத கோபத்தில், அவரது குடும்ப
வாழ்க்கையின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் பல
வழிகளில் அவருக்கு தொல்லை கொடுக்கிறார் நமீதா. அடாவடிப்
பெண்ணான நமீதா தரும் தொல்லைகளை ரவிச்சந்திரன் எப்படி
சமாளிக்கிறார் என்பதே பிரம்மாண்டம் படத்தின் கதை.
கதாநாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்திற்கு
ரவிச்சந்திரனே இசையமைத்திருக்கிறாராம். நடன இயக்கத்தை
சின்னி பிரகாஷ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை ஸ்டன் சிவா
கவனிக்கிறார். காதல், சென்ட்டிமென்ட் ஆக்ஷன் நிறைந்த
பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகும் பிரம்மாண்டம் படத்தை
சாய்பிரகாஷ் இயக்குகிறார். |