துடிக்கும்
கரங்கள், ஜானி, தீர்ப்பு, சிவப்பு ரோஜாக்கள், கடல்
மீன்கள், மின்சார க்ணணா, பட்ஜெட் பத்மநாபன்.... உட்பட
தமிழ், மலையாள மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை
தயாரித்த தயாரிப்பாளர் கே ஆர் ஜி தற்போது மாதவன்
மற்றும் சிவப்பதிகாரம் படத்தில் நடித்த மம்தாவை வைத்து
'குரு என் ஆளு' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
செல்வா இயக்கும் இப்படத்தைப் பற்றி நடிகர் மாதவன்
கூறியதாவது:இது ஒரு ஜாலியான படம். இதில் எனக்கு
விளம்பர படங்கள் எடுக்கும் கேரக்டர். மாடல் அழகியாக
மம்தா நடிக்கிறார். என்னுடைய முதலாளியாக அப்பாஸ்
நடிக்கிறார். 'மின்னலே' படத்திற்கு பிறகு நான் அப்பாஸ்.
விவேக் மூவரும் நடிக்கும் படம் இது. இந்த
சென்ட்மெண்ட்டே இப்படத்தின் வெற்றி நிச்சயம் என்று
உறுதி செய்தது போல் உள்ளது. 'அலைபாயுதே' படத்திலிருந்து
சமீபத்தில் வெளிவந்த 'எவனோ ஒருவன்' வரை பலவிதமாமன
கேரக்டர்களில் நடித்துவிட்டேன். ஆனால் 'குரு என் ஆளு'
படத்தில் உண்மையிலேயே எனக்கொரு வித்தியாசமான கேரக்டர்
கிடைத்துள்ளது. அதேபோல் இப்படத்தின் இயக்குநர் செல்வா
டைரக்ஷனில் வெளிவந்த 'பூவேலி', கர்ணா, நான் அவனில்லை,
ரோஜாவனம்... போன்ற படங்கள் என்ககு மிகவும் பிடித்தவை.
படத்தின் கதையை ஒரே வரியில் சொல்லிவிடலாம். அதனால்
இப்போதைக்கு அதுபற்றி மூச்சுவிட மாட்டேன் என்றார்
மாதவன். |