பிரண்ட்ஸ்
பெஸ்டிவல் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் எஸ்
சுதாகரன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் 'சித்தார்த்தா'.
இந்த படத்தில் கதாநாயகனாக சிபிராஜ் நடிக்கிறார்.
கதாநயாகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார்.
நகைச்சுவைக்கு கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
புதுமுக இயக்குநர் ஆ சிவாதேசன் கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்குகிறார். இயக்குநர் கே பாலசந்தரிடம் சினிமா
பயின்றிருப்பவர் இவர்.
"சித்தார்த்தனாக உலக இன்பங்களில் லயித்திருக்கும்
ஒருவன், புத்தனாக மாற விரும்புகிறான். புது
வாழ்க்கைக்குத் திரும்புகிறான். அவனை இந்தச் சமூகம்
புத்தனாக்கியதா இல்லையா என்பதே கதைக்களம்.
கடவுள் ஒரு ஜனநாயகவாதி. நல்லதை மட்டுமே நமக்குக்
காட்டுவதில்லை. ந ன்மை, தீமை இரண்டையும் காட்டி நம்
விருப்பத்துக்கு தேர்ந்தெடுக்க உரிமை கொடுப்பவர்.
நல்லது என்று சொன்னால் கூட யாரும் ஏற்பதில்லை.
கெட்டதில் விழுந்து வருந்துகிறார்கள். நன்மை தருவது எது?
நல்லவர்கள் யார் என்று தெளிவு வரும்போது வாழ்ந்து
பார்க்க வாழ்க்கை மிச்சம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட
யதார்த்த கருத்தையும் உள்ளடக்கியிருக்கிறது கதை!
என்கிறார் இயக்குநர் சிவாதேவன்.
பல வகையிலும் வழக்கமான சினிமா மரபுகளை விட்டு விலகி
புதுப்பாதையில் பயணிக்க விரும்புகிற இயக்குநர்,
சொல்லும் முதல் புதுமை "படத்தில் முறுக்கு மீசை,
மிரட்டல் பேச்சு,. ஆயுத அணிவகுப்பு...! போன்ற
வில்லன்கள் தொடர்பான எதுவுமே இல்லை. வில்லனே இல்லாத கதை.
சூழ்நிலைதான் வில்லன் வேடம் ஏற்றுள்ளது என்கிறார்.
இந்த படத்திற்கு விஜய் ஆன்டனி இசையமைக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலையை வித்தேஷும்
படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸும் கவனிக்கின்றனர். எஸ்
சுதாகரன் தயாரிக்கிறார். மதுரையிலும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த
திட்டமிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு
நடைபெறவுள்ளது. |