சினிமாவைப்பற்றி
சினிமாவாக எடுக்கப்பட்ட ஒரு சிலப் படங்களில் 'வெள்ளித்திரை'
படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன சின்ன
வேடங்களில் நடிக்க விருப்பமில்லாமல் ஹீரோவாகத்தான்
நடிப்பேன் என்று கோடம்பாக்கத்தில் பதினைந்து வருடங்கள்
போராடி வரும் கேரக்டர் பிரகாஷ் ராஜ். வழக்கமான மசாலாப்
படங்களின் மீது விருப்பமில்லாமல் நல்ல கதையை படமாக
எடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு
கேட்கும் உதவி இயக்குநர் கேரக்டரில் பிருத்வி ராஜ்
நடித்துள்ளார். நடிகையாக கோபிகா நடித்துள்ளார்.
பிருத்விராஜ்
அறையில் தங்கியிருக்கும் பிரகாஷ்ராஜ், அவரது கதையை
லாவகமாக திருடி கொண்டுபோய், ஒரு தயாரிப்பாளரிடம்
கொடுத்து, அதைதான் எழுதியதாக சொல்லி ஹீரோவாக நடிக்க
வாய்ப்பு பெற்று, மிகப்பெரிய நடிகராகிவிடுகிறார்
பிரகாஷ் ராஜ். கதை களவு போன வெறுப்பில் கால் டாக்சி
ஓட்டுகிறார் பிருத்வி. நல்ல சினிமா எடுக்கும் அந்த
கொள்கையிலிருந்து தன்னை தளர்த்திக் கொண்டு. பெரிய
ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜை வைத்து
படமெடுக்கிறார். சினிமாவில் வெற்றி பெறுவதற்கு முன்
எப்படி இருப்பார்கள். வெற்றியை தொட்ட பிறகு எப்படி
மாறிப் போவார்கள் என்பதை படுயதார்த்தமாக படம்
பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் விஜி.
குறிப்பாக வசனங்களில் விளையாட்டு காட்டியுள்ளார் இவர்.
இதுபோன்ற
படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளராய் நிறைய துணிச்சல்
வேண்டும். அதில் நான் தைரியசாலி என்பதுபோல மார்தட்டி
நிற்கிறார் பிரகாஷ்ராஜ். ஒரு நடிகைக்கு நிஜத்தில்
இவ்வளவு பிரச்சினைகள் உள்ளதா? என்று படம் பார்க்கும்
ஒவ்வொருத்தரையும் கேள்வி கேட்கவைக்கும் கேரக்டரில்
உருக வைத்துள்ளார் கோபிகா. 'வெயில்' பட மியூசிக்
டைரக்டர் ஜி.வி பிரகாஷ் பாடல்களிலும், பின்னணி
இசையிலும் பளிச்சிட வைக்கவில்லை.
சினிமாவில்
நன்றி மறந்தவர்கள் உண்டு என்பதற்கு பிரகாஷ்ராஜ், எம்
எஸ் பாஸ்கர் கேரக்டர். சினிமாவில் நன்றியோடு
உதவுபவர்களும் உண்டு என்பதற்கு சரத்பாபு, பிரதாப்
போத்தன், சார்லி கேரக்டர்களை குறிப்பிடலாம். சில
ஆண்டுகளுக்கு முன் மோகன்லாலும், சீனிவாசனும் நடித்து
வெளிவந்த 'உதயநானுதாரம்' என்னும் மலையாளப் படத்தின்
ரீமேக்தான் இந்த வெள்ளித் திரைப்படம். சினிமாவைப் பற்றி
வெளிவந்த படங்கள் எதுவும் மக்களிடம் பெரிய வரவேற்பை
பெற்றதில்லை. அதற்கு காரணம் சினிமாவிற்குள் நடக்கும்
அரசியல், மோதல், நன்றி மறப்பது போன்ற விஷயங்களை அவர்கள்
விரும்புவதில்லை. அந்த வகையில் இந்த 'வெள்ளித்திரை'
வெண்திரையில் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பது படம்
ஓடும் நாட்களை பொறுத்தது. தமிழ் சினிமாவில் நல்ல
முயற்சி!. |