|
வைரமான அவயம் - பற்கள்
மக்கள்
திறம்பட பணிபுரியவும், நலமாக வாழவும், நமது உடலிலுள்ள
அவயங்கள் ஆரோக்கியமாக அதனதன் வேலையை செய்யவேண்டும்.
இல்லையென்றால் நமது உடல் நோய் படுவது மற்றுமன்றி,
அல்லலும் படும்.
முக்கியமாக இதயம் ஒரு மென்மையான
அவயம் என்றும், மூளை அறிவு அவயம் எனவும், நுரையீரல்
காற்று பெறும் அவயம் என்றும், வயிறு சார்ந்த அவயங்கள்
நமக்கு ஊட்டச்சத்தினை பெருவதாகவும் இருக்கும்போது
வாயின் பற்கள் வைரமான அவயம் என கூறலாம்.
எல்லா அவயங்களும் அத்தியாவசியம்போல்
நமது பற்களும் மிகவும் தேவையான அவயமாகிறது. பற்களினால்
சுவைத்து உண்ணுகிறோம். அதனால் ஊட்டச்சத்து உடலிலே
ஈர்க்கப்பட்டு, உயரமாகவும் பலமாகவும் வளர்ச்சி
பெறுகிறோம். மூளை வளமும் பெறுகிறது.
பற்களினால் இனிமையான சொல்வளம்
பெறுகிறோம். அதனால் சமூக நாகரீகம் பெறுகிறோம்.
பற்களினால் நமது வதனம் அழகு
பெறுகிறது. அதனால் சமூக நண்பர்களையும், வாழ்க்கையில்
வெற்றியையும் பெறுகிறோம்.
அழகிய ஆரோக்கிய பற்களினால், பள்ளிக்
குழந்தைகளின் படிப்புத் திறனும் செவ்வனேயுள்ளது.
முழுமையாக கூறவேண்டுமேயானால் நல்ல
பற்களால் மனிதன் துன்பமில்லாமல், பிணியின்மையினால்,
நல்ல பயனளிக்கும் நாட்டுக்குடிமகனாக திகழ்ந்து, அணியான
நாட்டிற்கு பணிபுரியயியலும். |