தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
City Search  in     
 
 
 
உடல் நலத்திற்கு பற்கள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  

கருவுற்ற காலத்து பற்கள் பாதுகாப்பு

மனிதர்களாகிய நாம், தாயின் வயிற்றில் கருவாக உருவாகி பத்து மாத அளவில் வளர்ந்து, இவ்வுலகில் பிறக்கின்றோம். பிறக்கும்போது, வாயில் பற்கள் இருப்பதில்லை. உண்மையென்னவென்றால், கருவுற்ற ஆறாவது வாரத்திலேயே கருவின் முகம் உருவாகிறது. அந்த முகத்தின் தாடையில் உருவாகும் பற்கள்தான், முதன் முதலில் தம் உருவங்களை பெறுகின்றன. பின்னர் கேல்ஷியம் உப்புச்சத்துக்கள் படிந்து, நாம் அறிகின்ற பற்களாக கடினத்தன்மையைப் பெறுகின்றன. ஆகவே தாயின் வயிற்றில் உள்ள சிசு நல்ல வளர்ச்சி பெறவும், பற்கள் நன்றாக உருவாகவும், தாயின் நலம் மிக முக்கியமாக பேணப்படவேண்டும். தாயின் நலம், நல்ல ஆரோக்கியமான சிசுவை உருவாக்கும்.

ஆகையினால், கருவுற்றதாய் கருவுற்ற காலத்து நல்ல ஊட்டச்சத்தினை பெற சத்தான ஆகாரம் உட்கொள்ளவேண்டும். தனக்கு நோய் வராமல் இருக்க நோய் தடுப்பினை ஏற்றுக் கொள்ளவேண்டும், நோய் தடுப்பு ஊசியையும் போட்டுக் கொள்ளலாம்.

தனது உடல் மற்றும் பற்களின் சுகாதாரம் பேணப்படவேண்டும். நல்ல வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து மன மகிழ்வுடன் ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்பார்களேயானால், முத்தான வெண்ணகை கொண்ட அறிவுள்ள நன்மக்களை பெறலாம்.

இப்படி வளமாக வளர்ந்த பற்கள், பிறந்த பின்னர் உடலின் நோய் தடுப்பிற்கு உதவுகிறது.

மேலும் April 10th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
 

 

மேலும்
 
Asia Cup 2008
Final: India v Sri Lanka Ball by ball update starts at 15.30 hrs (IST)

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy