தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
ராகவேந்திர ஸ்வாமிகள் ஆல்பம்
- ஷோபா சந்திரசேகர்
செய்திகள
செ.பா  
திரைப்பட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய்யின் அம்மாவுமாகிய ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகி என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. மகாராஜாபுரம் சந்தானம் அவர்களின் மகள் திருமதி பிருந்தா தியாகராஜன் அவர்களிடம் ஷோபா சந்திரசேகர் முறைப்படி சங்கீதம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளைப் பற்றி பக்தி மணம் கமழும் பாடல் தொகுப்பை பாடியுள்ளார் இவர். 'குருராஜா சரணம்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆல்பத்தை, கடந்த ஞாயிறு அன்று நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் முன்னிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த ஆடீயோ வெளியீட்டு விழா மிகவும் எளிமையாக நடந்துள்ளது. இதுபற்றி ஷோபா சந்திரசேகர் கூறுகையில், வழக்கமாக கேஸட் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளாதவர் ரஜினி. இது ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய பாடல்கள் என்றதும், உடனடியாக அவரது வீட்டுக்கு எங்களை வரவழைத்து இப்பாடல்களை வெளியிட்டு எங்களுக்கு பெருமை சேர்த்தார். ஏழு பாடல்கள் கொண்ட இந்த ஆல்பத்தை மீண்டும் ஒரு முறை முழுமையாக கேட்டுவிட்டு போன் செய்து சொல்வதாக சொன்னார் ரஜினி. ராகவேந்திர சுவாமிகளை மனதார நினைத்தால் போதும் அவர் பல அற்புதங்களை நமக்கு தருவார். அந்த ஆசி உங்களுக்கு (ஷோபா) கிடைத்துள்ளது என்று ரஜினி சொன்னபோதே நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன் என்றார் ஷோபா சந்திரசேகர்.

Published on 11th March 2008
 
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 9th May 2008: Rajasthan vs Decan
Live Commentary Starts at 20:00 IST
Mumbai
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy