வாட்ஸ்-அப்பில் வதந்திகளை பரப்பினால் சிறை தண்டனை!

April 21, 2017, Chennai

Ads after article title

வாரணாசி, ஏப்.21 (டி.என்.எஸ்) வாட்ஸ்அப் செயலி மூலம் போலியான தகவல்கள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப், பேஸ்புக் அல்லது மற்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குரூப் அட்மின்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

இந்தியாவில் உள்ள 20 கோடி வாட்ஸ்அப் பயனாளிகளில் காவல் துறை சார்பில் குரூப் அட்மின்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி வாட்ஸ்-அப் குரூப் அட்மின்கள் தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை மட்டும் குரூப் அட்மின்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும், வீண் வதந்திகளை பரப்பும் பட்சத்தில் அட்மின்கள் அவற்றை உடனடியாக நீக்கி, அருகாமையில் இருக்கும் காவல் துறையில் தெரிவிக்க வேண்டும். 

வாட்ஸ்அப் குரூப்களில் வதந்திகள் பரவி குரூப் அட்மின்கள் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அட்மின்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.