கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டை

June 06, 2016, Chennai

Ads after article title

கிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணிமை என்ற புதிய தொழில்நுட்பம், இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


கணினியில் ஆற்றக்கூடிய அனைத்தையும் இணையத்திலேயே ஆற்றலாம்; அனைத்துத் தரவுகளையும் இணையத்திலேயே சேமித்து வைக்கலாம்; இதன் மூலம் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் நம் கணினியில் உள்ள தரவுகளை நாம் அடையலாம்; மென்பொருள் வடிவமைப்பாளர் முதல் தனி நபர் வரையிலும் பலருக்கும் பல விதங்களில் இந்த வசதி பயன்படுகிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் நுட்பத்தின் அடிப்படையிலான பல்வேறு சேவைகளை http://www.8kmiles.com என்ற இணையதளம் வழங்கி வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர், ஹரிஷ் கணேசன்; அத்துடன் அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் திகழ்கிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், 2009 ஜூலை மாதம் குரல் அரட்டை (Voice Chat) நிகழ்த்தினார்.

குரல் அரட்டை என்பது, நாம் தொலைபேசியில் பேசுவது போன்றதே. ஆனால், முழுக்க முழுக்க இணையம் வழியாகப் பேசும் முறையாகும். கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் குறித்து, தமிழ் வாசகர்கள் அறியும் வண்ணம், எளிய முறையில் இந்தக் குரல் அரட்டை அமைந்துள்ளது. வாருங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து ஹரிஷ் கணேசன் என்ன சொல்கிறார் என்று கேட்போம்.