முதலில் ஜெகன். பிறகு ஜெகன்ஜி. அப்புறம் ஜெகன் ராம். இப்படி தனது பெயரை மாற்றிக் கொண்டே வந்த ராமன் தேடிய சீதை படத்தின் இயக்குனரும், சேரனின் இணை இயக்குனருமான ஜெகன் ராம், இந்த பெயரே ராசியாக இருப்பதாக உணர்ந்துவிட்டார். காரணம், ராமன் தேடிய சீதை ரிசல்ட் எப்படியிருந்தாலும், நீங்கள்தான் என் படத்தின் இயக்குனர் என்று இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பா.விஜய்.
பாடலாசிரியரான விஜய் திடீரென்று ஹீரோவாகிவிட்டார். கலைஞரின் தாய் காவியம் படத்தில் இவர்தான் ஹீரோ. இப்படத்தை இயக்கிவந்த இயக்குனரும், இப்படத்தின் தயாரிப்பாளரும் ஒரு சேர விலகிக்கொண்டார்கள். படமும் ஒரு பாடல் காட்சி எடுத்ததோடு நிற்கிறது. இந்த நிலையில்தான் ஜெகன்ராமைத் தனது படத்தை இயக்க அழைப்பு விடுத்தார் விஜய். பழையன கழிதலும், புதியன புகுதலும் நல்ல சென்ட்டிமென்ட்தான்.