சுல்தான் தி வாரியர் படத்தில் இலியானா அதிக சம்பளம் கேட்டதால் விஜயலட்சுமி கமிட் ஆகிவிட்டார் என்பது பழைய செய்தி. நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டதாம். மற்ற நடிகைகள் போலவே விஜயலட்சுமியும் ரஜினி புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார். ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் எக்சலண்ட் என்று கை குலுக்குகிறாராம் ரஜினி.
அனிமேஷன் படம் என்பதால் ஒரு செவுகர்யம் இருவருக்கும். நோ மேக்கப், நோ காஸ்ட்யூம் சேஞ்ச். செவுகர்யம் அது என்றால், அசெவுகர்யம் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும், ஸ்கிரீனில் தெரியப்போவது இவர் இல்லை. இவரது பிம்பம்தான். ஆனாலும், பதினெட்டு மொழிகளில் வரப்போகும் படத்தில் ஒரே ஹீரோயினாக நடிப்பது அதிர்ஷ்டம்தானே?
இலியானா இல்லை என்றானதும், தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்த சௌந்தர்யா அங்கேயே சம்பளம் பேசி, அப்போதே அட்வான்ஸ் கொடுத்ததுதான் டச் என்கிறார் விஜயலட்சுமி. ரஜினியின் அதே வேகம் செவுந்தர்யாவிடமும்.
|