சினிமா பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்புகிறார் விஜயகாந்த். ஏனென்றால் அரசியல் நிருபர்களைச் சந்தித்துச் சந்தித்துப் போரடித்துவிட்டதாம். எங்கள் ஆசான் படப்பிடிப்பு பிலிம் சிட்டியில் நடந்துகொண்டிருந்தது. சினிமா நிருபர்களை அழைத்தால் கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே என்று விஜயகாந்த் விரும்ப, ஆகஸ்ட் 1 மதியம் ஒரு மணி என்று நேரத்தை முடிவுசெய்தார்கள்.
ஆனால் மூத்த நிருபர்கள் சிலர் அமாவாசையும் அதுவுமா மதியம் ஒரு மணிக்கு வரச் செதன்னா எப்படி என்றார்களாம். சரி, மதியம் 3 மணிக்கு வாங்க என்றார் விஜயகாந்த். அங்கேயும் விதி விளையாடியது. சூரிய கிரகணம். அதனால் இன்னொரு நாளைக்கு வச்சுக்கக் கூடாதா? என்று நிருபர்கள் கேட்க, கேப்டனின் சந்திப்பு மறுபடியும் தள்ளிப்போனது. இன்னும் இரண்டு முன்று நாட்கள் கழித்து சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம் இப்போதைக்கு.
|