சத்யம் படத்தின் ரிசல்ட் வேறு மாதிரி இருந்தாலும், படத்தைத் தனது நண்பர்களுக்கு ஸ்பெஷலாகப் போட்டுக் காட்டியிருக்கிறார் விஷால். ஜெயம் ரவி, லிங்குசாமி உள்ளிட்ட பலரும் அந்த லிஸ்டில் இருக்க, நெருங்கிய தோழியாக அழைக்கப்பட்ட ஒரே ஒருவர் த்ரிஷா மட்டுமே. தனது குடும்பதோடு வந்திருந்தார் அவரும்.
போர் பிரேம்ஸ் தியேட்டரில் கும்பலாக அமர்ந்து ரசித்த இந்த டீம் வெளியே வந்து விஷாலின் ஆக்ஷனை வியந்து பாராட்டினார்களாம். வில்லு படத்திற்காக வெளிநாடடில் ஆடிக் கொண்டிருக்கும் நயன்தாரா, அங்கிருந்தபடியே தனது நண்பர்களுக்கு போன் செய்து படத்தைப் பற்றியும், ரிசல்ட் குறித்தும் விசாரித்து வருகிறார். (அடுத்த படத்தின் சம்பளத்தை நிர்ணயிப்பது தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம்தானே!)
தமிழில் முன்னே பின்னே இருந்தாலும், தெலுங்கில் சற்றே தலை நிமிர்ந்திருக்கிறது சத்யம். இதையடுத்துத் தெலுங்கில் இருந்து அழைப்புகளும் வருகிறது இயக்குனர் ஏ. ராஜசேகருக்கு. தற்போது ஆந்திராவில் முகாமிட்டிருக்கும் அவர், அங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்குக் கதை சொல்லி வருகிறார். தனது அடுத்த படத்தையும் ஆக்ஷன் படமாக எடுக்க வேண்டும் என்பதே இவரது ஆசையாம்.