நெசவாளர்களின் கூலிப் போராட்டம் முடிவுக்கு வராமல், அங்கங்கே அவர்களுக்காகக் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் வேண்டுகோள் அரசின் காதுகளில் விழுவதற்குள்ளாகவே அயல்நாட்டின் காதில் விழும் போலிருக்கிறது. அந்த வேலையைத் தனது திரைப்படத்தின் வழியாகச் செய்துவருகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
இவரது கஞ்சீவரம் என்ற படம் நெசவாளர்கள் வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறது. அவர்களின் சந்தோஷங்கள், துயரங்கள், இயந்திரத்தின் வருநகயால் அவர்களுக்கு உண்டாகியிருக்கும் பாதிப்புகள்... இவை எல்லாவற்றயும் சொல்லக்கூடிய படமாம் இது.
பிரகாஷ்ராஜும், சமீபத்தில் விஷாலின் அண்ணியாகிவிட்ட ஸ்ரேயாரெட்டியும் நடித்திருக்கும் படம் இது. ரிலீஸ் ஆவதற்கு முன்பாக டொரண்டோவில் நடைபெற இருக்கும் உலகத் திரைப்பட விழாவில் இப்படத்தைத்திரையிட இருக்கிறார்கள். ரிலீஸ் ஆகாத படங்கள்தான் டொரண்டோ படவிழாவில் திரையிடப்படும் என்பதால் தமிழ்நாட்டில் இதன் ரிலீசையே தள்ளிவைத்திருக்கிறார் பிரியதர்ஷன்.