சிவாஜியின் "அண்ணன் ஒரு கோவில்" போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் மோகன்பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கிக்கொண்டிருப்பவர். இப்படியெல்லாம் அறிமுகம் செய்வதை விட, சூப்பர் ஸ்டார்ரஜினியின் நெருங்கிய நண்பர் என்றால் சட்டென்று புரியும். தனது மகன் மனோஜ் குமாரை தமிழில் அறிமுகம் செய்கிறார் மோகன்பாபு.
இதற்காகச் சென்னை வந்திருந்தவர், தமிழ் திரையுலகின் முக்கியஸ்தர்களைஅழைத்து மகனை வாழ்த்தச் செய்தார். கடைசிவரை ரஜினி வருவார் என்றுகிசுகிசுக்கப்பட்டாலும், ஏனோ அவர் வரவேயில்லை. தனக்கும் ரஜினிக்கும் இருக்கும் நெருக்கத்தை மேடையில் அநாயசமாக வெளிப்படுத்திய மோகன்பாபு, ரஜினியை அவன் இவன் என்றே உச்சரிக்க, பலருக்கும் வியப்பு.
என்னை தெரியுமா? இதுதான் படத்தின் தலைப்பு. விழாவில் பேசிய இயக்குனர் அமீர், இந்த படத்திற்கு 'நான் யார் தெரியுமா' என்று டைட்டில் தவத்து, சப் டைட்டிலாக 'சன் ஆப் மோகன்பாபு' என்றே வைத்திருக்கலாம் என்றார்.
விழாவில் பேசிய பலரும் மோகன்பாபுவின் தைரியத்தையும், அவரது துப்பாக்கிப் பிரயோகங்களையும் பேசப் பேச, ஆடியன்சில் ஒருவராக இருந்து ரசித்துக்கொண்டிருந்தார் மோகன்பாபுவின் மனைவி. சென்னையில் தான் ஒருவேளை சாப்பாட்டுக்குப் பட்ட கஷ்டங்களையும் கூறினார் பாபு. அப்போதுமட்டும் இந்த அம்மையாரின் கண்களில் ஒரு துளி கண்ணீர்.
பாபுகாரு பேச்சின் ஹைலைட் என்ன தெரியுமா? தமிழ்நாடுதான் என் தாய்நாடு!