தான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்! வேறு நடிகைகளாக இருந்தால் இந்த ஒரு சந்தோஷத்திலேயே பல மடங்கு எடை கூடியிருக்கும். ஆனால் அப்படியே இருக்கிறார் விஜயலட்சுமி. அதே நேரம், அதே இடம் என்று தனது அடுத்த அஸ்திரத்தை ஏவத் தயாராகிவிட்ட விஜயலட்சுமிக்கு இன்னும் அந்த பிரமிப்பு விலகவில்லை. அது ரஜினியோடு நடித்த நான்கு நாட்கள்.
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கினார்களாம். படத்திற்கு மொத்தம்பத்து நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். ஆனால் கதை எதுவும்சொல்லவில்லை என்பதால், எடுக்கப்பட்ட இந்த நான்கு நாட்களும் என்னஎடுக்கிறார்கள் என்றே புரியவில்லை. சொன்னதைச் செய்து கொடுத்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் நன்றாக வரும் என்ற நம்பிக்கைதான் என்கிறார்.
தன்னுடன் ரஜினி நடித்த அந்த நான்கு நாட்களில், ரஜினியிடம் கற்றுக்கொண்டது நிறைய என்கிறார். (எல்லாரும் சொல்வதுதானே?) ஆனாலும் சூப்பர் ஸ்டாரிடம் பிடித்தது விஜியின் குடும்பத்தைப் பற்றியும் கேட்ட அக்கறைதானாம்.