நேற்று மாலை 12 மணிக்கெல்லாம் பற்றிக்கொண்டது அந்தச் செய்தி. ரம்பா விஷம் குடித்துவிட்டாராம். சென்னை வடபழனியில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சீரியஸாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். செய்தி பரவிய அடுத்த நிமிடம், நிருபர்களில் பலர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு முன் குவிந்தனர்.
விரும்பத்தகாத இந்த செய்தி மாலை நாளிதழ்களை அலங்கரித்துவிட, அன்று அந்திப்பொழுதில் நிருபர்களை சந்தித்தார் ரம்பா. ஃபுட் பாய்சன்தான், வேறொன்றுமில்லை என்று விளக்கம் கொடுத்ததோடு தான் மூன்று நாட்களாகத் தொடர்ந்து விரதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
கடவுள் கொடுத்த உயிரைப் போக்கிக்கொள்ள ஒருவருக்கும் உரிமை இல்லை. எனக்குக் கடன் தொல்லைகள் இருப்பது உண்மைதான். அதற்காக இப்படியொரு முடிவை எடுத்துவிட மாட்டேன் என்றார் தெளிவாக. ரம்பாவின் மன உறுதி தொடரட்டும்.