இம்மாத இறுதியில் வருவதாக இருந்த சரோஜா, இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகும் போலிருக்கிறது. காரணம், குசேலன் விவகாரம்தான். இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம், குசேலன் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக சரோஜாவைக் குறைந்த விலைக்குக் கொடுக்கிறார்களாம்.
ஏற்கனேவே தயாரிப்பாளர்களும் ரஜினியும் இணைந்து செட்டில் செய்யும் 33 சதவீதத்துடன், சரோஜாவும் இணைந்து நஷ்டத்தைச் சரி செய்யும் என்பது கால்குலேஷன். இதில் என்ன குழப்பமோ, மறுபடியும் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமும், சென்னை வந்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தை முற்றுகையிடவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தலைவரைத் தன்னந்தனியாக விட்டுவிட்டோ மே என்று நினைத்த ரஜினி ரசிகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் புறப்பட்டு சென்னை வந்து தங்கள் ஆதரவைக் காட்ட நினைத்தார்களாம். ஒரே நாளில் சென்னை வந்து சேரும் இவர்கள் தியேட்டர் அதிபர்களுக்கு எதிராகக் கோஷம் போடத் திட்டம் வைத்திருந்தார்களாம். நல்லவேளையாக ரஜினியே தலையிட்டு அனைவரையும் அமைதி காக்கச் சொன்னதாகத் தகவல்.
என்ன கொடுமை சரவணன் இது?