பெரிய நடிகர்கள், அல்லது பெரிய இயக்குனர்கள், இரண்டும் இல்லையென்றால் பெரிய நிறுவனங்கள். இவை தவிரப் புதியவர்களுக்குப் பாடல்கள் எழுதுவதில்லை கவிப்பேரரசு வைரமுத்து. இவர்களே அணுகுவதில்லையா? அல்லது அவரே மறுக்கிறாரா என்ற கேள்விகளுக்கு முறையான விடைகள் இல்லை. ஆனால் அடுத்த வருடத்திலிருந்து இது மாறக்கூடும் என்கிறது வைரமுத்து வட்டாரம்.
ஆண்டொன்றுக்கு முப்பது படங்களுக்காவது பாடல்கள் எழுத வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கவிஞர். இதற்கு அவர் சொல்லும் காரணம்தான் சக கவிஞர்களைக் கவனிக்க வைத்திருக்கிறது. இப்போது வருகிற பாடல்களில் இலக்கியத் தரம் குறைந்துகொண்டே வருகிறது. காலப்போக்கில் திரையிசைத் தமிழின் தரம் குறைந்துவிடக் கூடாதல்லவா? அதனால்தான் இந்த முப்பது படக் கணக்கு. இது குறைந்தபட்சக் கணக்கு. வாய்ப்புக் கிடைத்தால் இந்த எண்ணிக்கையைக் கூட்டும் எண்ணமும் இருக்கிறதாம் கவிஞரிடம்.
அப்படியே சம்பளத்தையும் குறைங்கய்யா என்ற குரலும் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.