படமெல்லாம் முடிந்துவிட்டது. பாடல்கள் மட்டும்தான் பாக்கி. அதை வெளிநாட்டில் எடுத்துவிடலாம்னு தலைவரிடம் கேட்கிறேன். ரொம்ப வற்புறுத்தலுககுப் பிறகு இப்போதான் ஒப்புக் கொண்டார் என்கிறார் எங்கள் ஆசான் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ்.
எனக்கு 20 வருஷமா தங்கராஜைத் தெரியும். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். இருபது வருஷமா என்னிடம் கால்ஷீட் கேட்டுட்டு இருக்கார். இப்போதுதான் கொடுக்க முடிந்தது என்கிறார் விஜயகாந்த்.
சரி, பாரின் டிரிப்புக்கு எதுக்கு இத்தனை தயக்கம்? வேறொன்றுமில்லை, பணத்தை எதுக்கு வேஸ்டா செலவு பண்ணணும். இங்கேயே எங்காவது எடுத்திட்டா சரியா இருக்குமே என்று தயாரிப்பாளருக்கு நல்லதைத்தான் சொன்னேன் என்ற விஜயகாந்த், அரசியல் காரணங்களால் திடீர்னு வர வேண்டி இருந்தா வந்திடணும் என்ற கண்டிஷனோடுதான் பிளைட் ஏறவிருக்கிறாராம்.
படத்தில் ஒரேயொரு பஞ்ச் டயலாக் வைத்திருக்கிறார்கள். மதங்கொண்ட யானையாக இருந்தாலும், சினம் கொண்ட சிங்கத்தின் முன் தோற்றுதான் ஆக வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆர் பேசுகிற வசனமாம் இது.
கருப்பு எம்.ஜி.ஆர் அல்லவா? அதனால்தான் எம்.ஜி.ஆர் டயலாக்.