சுசி கணேசன் ஆரம்பித்து வைத்த சென்ட்டிமென்ட். இன்னும் தொடர்கிறது ஒவ்வொரு படத்திலும். திருட்டுப் பயலே படத்தில் கடவுள் கெட்டப்பில் ஒரு டூயட் ஆடியிருப்பார் ஜீவன். தையக்கா தைய தைய்யக்கா என்ற பாடலில் இவரும் சோனியாவும், சாமி வரும் பல்லக்கில் ஆட்டம் போடுவதை ரசிக்காதவர்கள் கிடையாது. படமும் ஹிட். அடுத்த படமான நான் அவனில்லையில் கிருஷ்ணர் வேடம் போட்டார் ஜீவன். இரண்டு படங்களும் ஹிட்.
விடுவார்களா? இப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ண லீலை படத்திலும் இப்படியொரு கெட் அப் போட்டு விட்டார்களாம். சாதாரணமாகவே கிருபானந்த வாரியார் ரேஞ்சுக்குப் 'பட்டை'யைக் கிளப்பும் ஜீவன், இந்த கடவுள் வேடங்களுக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்கிறார். மேக்கப் போடுவதற்கு உட்கார்ந்தால் கையெடுத்துக் கும்பிட்டபடியே அமர்கிறாராம்.
ஆனால் இந்த கெட் அப்போடு படங்களில் அவர் செய்யும் சேட்டைதான் ஒரு மாதிரி என்பது வேறு விஷயம்.