சர்வம் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக செட் வேலைகளில் ஈடுபட்டிருந்த இருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நிஜமாகவே டைவ் அடிக்கிற காட்சிகளை எடுக்கவிருக்கிறார்கள். அதுவும் அந்தரத்தில்.
சர்க்கஸ் காட்சி ஒன்றை இப்படத்திற்காக எடுக்கத் திட்டமிட்டிருக்கும் விஷ்ணுவர்த்தன், இங்கே எடுத்தால் மேற்படி பிரச்சனையை எழுதி, மேலும் பிரச்சனையாக்குவார்கள் என்பதால், மூணாறு பக்கத்தில் செட் போட்டுக்கொண்டிருக்கிறார். இதற்காக நிஜமான சர்க்கஸ் கலைஞர்களை மும்பையில் இருந்து வரவழைக்கப் போகிறார்களாம். அப்படியே யானை, ஒட்டகங்களும் வரவிருக்கின்றன.
இதற்கிடையில் நடந்து முடிந்த அசம்பாவிதங்களுக்குப் படத்தின் டைட்டிலும் ஒரு காரணம் என்று நினைக்கிற ஒரு சிலர், பெயரை மாற்றிவிடுங்களேன் என்கிறார்களாம். பரிசீலிக்கும் மூடில் இருக்கிறார் விஷ்ணு.