ராமன் தேடிய சீதை படத்தைப் பார்த்துவிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டாராம் சேரன். "இந்தப் படம் இன்னொரு மாயக்கண்ணாடி போல பெரும் தோல்வி அடையும்" என்று அவர் கோபத்தை வெளிப்படுத்த, ஆடிப் போய்விட்டாராம் அப்படத்தின் இயக்குனர் ஜெகன்நாத்.
ஆனால் படம் வெளியாகி பரவலான பாராட்டுகளையும், வசூலையும் அள்ள, ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் ஜெகன்நாத். கொல்கத்தாவில் இருக்கும் சேரனிடம் பல்வேறு ஏரியாவைச் சேர்ந்த விநியோகஸ்தர்களை விட்டே பேசச் சொல்கிறாராம். அது மட்டுமல்லாமல் இங்கே பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் அவ்வப்போது சேரனுக்குத் தொலைபேசி வழியாகச் சொல்லிக்கொண்டும் இருக்கிறாராம். இவ்வளவுக்குப் பிறகு நான்தான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேன் என்று தனது சிஷ்யரிடம் வருத்தம் தெரிவித்தாராம் சேரன்.
ஏதாவது ஒன்று செய்துவிட்டு வருத்தம் தெரிவிப்பதே சேரனின் வேலையா போச்சு.