ஜெய் ஆகாஷின் நம்பிக்கை

kaadalan-kaadali
துவரை 36 படங்களில் நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். ஆனால் ஒரு சில படங்கள் தவிர, மற்றவையெல்லாம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையும், ஆகாஷுக்குக் கஷ்டத்தையும்தான் கொடுத்தன. இந்த முறை விடக் கூடாது என்று அவரே களத்தில் குதித்துவிட்டார்.

தெலுங்கில் ஒரு படத்தை ஜெய் ஆகாஷ் இயக்கியிருந்தாராம். படம் ஹிட். ஆகாஷின் நண்பர்கள், "பேசாம டைரக்க்ஷன் ரூட்டைப் பிடிச்சிடு" என்று ஐடியா கொடுக்க, கிளாப் கட்டையைக் கையில் எடுத்துவிட்டார். தான் இயக்கும் படத்திற்கு 'காதலன் காதலி' என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தில் இவருக்கு மூன்று ஜோடிகளாம். கதையைக் கேட்ட என்ஆர்ஐ தயாரிப்பாளர் ஒருவர், ஆகாஷை நம்பிப் பணத்தைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.

45 நாட்களில் படத்தை முடிச்சிடலாம்னு இருக்கேன். தெலுங்குப் படம் பண்ணும்போது மூணு கேமிரா செட்டப்போடு படப்பிடிப்பை நடத்தினேன். ஷூட்டிங் சீக்கிரம் முடிஞ்சது. தமிழில் இரண்டு கேமிரா செட்டப்போடு இறங்கியிருக்கேன். இதுவரைக்கும் ஜெய் ஆகாஷ்னு ஒரு ஹீரோ இருக்காருன்னு சொல்ற அளவுக்குதான் என் மார்க்கெட் இருந்தது. ஆனா இந்தப் படத்துக்குப் பிறகு சில ஸ்டெப்புகளாவது என் மார்க்கெட் உயரும். அதுக்கு நான் கியாரண்டி என்றார் உறுதியாக.

படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டால், பெரிய இயக்குனர்கள் என்னைத் தேடி வருவாங்க. அப்படி வரலைன்னா கூட நானே எனது படங்களை இயக்கிப்பேன் என்கிறார் நம்பிக்கையோடு.

Click here for Archives


மேலும் October 14th, 2008

Previous:     சன் செய்வது சரியா?

Quick Links
 The Chase Game

Growing awareness amongst public about their consumer rights in events of medical negligence and increasing tribe of 'ambulance chasing lawyers'...More

Search
asklaila IN
Pay Per Click Ads by pay per click advertising by Kontera
© Copyright 2008,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601/420 71942/420 71943
Fax: 91-44-4212 2754 cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.