எஸ்.டி.சபா இயக்கும் புதிய படம் மா. இதில் எட்டு வயதுக் குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார் பூமிகா. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஒருவர் ஸ்ரீகாந்த். மற்றவர் ப்ரித்விராஜ்.
ரோஜாக்கூட்டம் படத்திற்குப் பிறகு மீண்டும் பூமிகா-ஸ்ரீகாந்த் ஜோடியை இணைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த டைரக்டர் சசிக்கு அந்த வாய்ப்பு சம்பள விஷயத்தால் பறிபோனது. ஆனால் இந்தப் படத்தைத் தயாரிக்கும் மீடியா மேஜிக், பூமிகா கேட்ட சம்பளத்தை பேரம் பேசாமல் வழங்க முன்வந்ததாம். அதனால்தான் சம்மதித்தாராம் பூமிகா.
கதைப்படி பிரித்வியும் பூமிகாவும் தம்பதிகள். இடையில் வரும் ஸ்ரீகாந்த், திருமதி ப்ரித்வியின் முன்னாள் காதலர். இந்த ரகசியம் தெரியவர, என்ன செய்தார் ப்ரித்வி? இதுதான் கதையாம்.
ரோஜாக்கூட்டம் படத்திற்காக ஸ்ரீயும் பூமியும் ஆடிய பாடல் ஒன்று படத்தில் இடம் பெறாமல் இருந்ததாம். அதை வாங்கி ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகப் படத்தில் இணைக்கும் திட்டத்திலிருக்கிறார்கள். இதற்குச் சம்மதிப்பாரா ஆஸ்கார் ரவிச்சந்திரன்?