சிபிராஜின் பார்ட்டி

ல்லாவற்றுக்கும் பச்சைக் கொடி காட்டும் சத்யராஜ், சிபிராஜின் இன்னொரு ஆசையையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார். தனக்கு விரைவில் திருமணம் ஆவதை முன்னிட்டு வெகு விமரிசையாக ஒரு பேச்சுலர் பார்ட்டி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம் சிபி. அதில் 'தண்ணீர்' பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்பதும் அவரது விருப்பம். தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல, பணத்தை 'தண்ணீராக' செலவு செய்ய முன்வந்தார் தந்தையும்.

முன்னணி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விடிய விடிய விருந்து நடந்ததது. ரஜினி, கமல் தவிர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டார்களாம். ஆனாலும், சிபிக்கு ஒரேயொரு வருத்தம். தனது உற்ற தோழரான ரகுவண்ணன் வரவில்லை என்பதுதான். இவருக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்றும், அது தொடர்பாக வெளியான வழக்குகளும் இந்த நிகழ்ச்சிக்கு அவரை வர விடாமல் செய்தாலும், இருந்த இடத்திலிருந்தே நண்பனை வாழ்த்தினாராம்.


மேலும் September 2nd, 2008

Previous:     மீண்டும் தமிழில் பூமிகா

Quick Links
 The Chase Game

Growing awareness amongst public about their consumer rights in events of medical negligence and increasing tribe of 'ambulance chasing lawyers'...More

Search
asklaila IN
Pay Per Click Ads by pay per click advertising by Kontera
© Copyright 2008,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601/420 71942/420 71943
Fax: 91-44-4212 2754 cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.