கடந்த முப்பது ஆண்டுகளாக வசூல் மன்னனாக இருந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தின் மூலம் குபேரன் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் அதிக விலை கொடுத்துப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்மையில் குசேலனாகிவிடக்கூடிய நிலமைக்குப் போய்விட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதையடுத்து, இதில் ஏற்பட்ட இழப்புக்கான நஷ்ட ஈட்டைத் தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ், பிரமிட் சாய்மீரா நிறுவனம் மற்றும் நடிகர் ரஜினியின் படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோ ம் என்று கூறிய திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது பின்வாங்கியுள்ளனர்.
குசேலன் நஷ்ட ஈடு விவகாரம் குறித்துத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலேதசனை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை நிலவரத்தின் சூட்டைத் தணித்து சமரசம் ஏற்பட வழிவகுக்கும் விதத்தில் இருக்கிறது. அறிக்கையின் விவரம்:
குசேலன் படம் தயாரித்த கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கும், படத்தை வெளியிட்ட பிரமிடு சாய்மீரா நிறுவனத்துக்கும் மற்றும் ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றுக்கும் குசேலன் படத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் ஒத்துழைப்புத் தர மாட்டோ ம் எனத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்ததாக வெளியான தவறான செய்திகள் குறித்து விவாதித்தேதம்.
திரையுலகம் என்பது ஓரு கூட்டுக் குடும்பம். இதில் சிறு சிறு கருத்து வேற்றுமைகள் வருவது போல எங்கள் அமைப்புகளிலும் வந்தது. அதை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக்கொண்டோ ம்.
இனி வரும் காலங்களில் காலம் காலமாகத் திரையுலகில் கடைப்பிடித்துவரும் வியாபார தர்மங்களைக் கடைப்பிடிப்பது என்றும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுப்பதில்லை என்றும் தீர்மானித்திருக்கிறேதம். மேலும் குசேலன் படம் சம்பந்தமாக வெளிவந்த சில கருத்துகள் எங்களால் சொல்லப்படவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சினிமா என்ற கலையுலகம் வெற்றி, தேதல்வி ஏன மாறி மாறி வரக்கூடிய வியாபாரத்துறை என திரையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் நன்றாகவே அறிவர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
70 சதவீத நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்கவில்லை என்பதைச் சம்பந்தப்பட்ட அமைபுகள் இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டன என்றாலும் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ், பிரமிடு சாய்மீரா நிறுவனங்கள் தரத் தயாராக இருந்த 35 சதவீத நஷ்ட ஈட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதன் மூலம் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ், பிரமிட், ரஜினிகாந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட படங்கள் எதற்கும் பிரச்சினை வராது எனத் தெரிகிறது.