முன்னணி ஹீரோக்களிடம் வில்லனாக நடிக்கிறீர்களா என்றால், அடிக்கவே வருவார்கள். ஆனால் ஒருவர் கேட்டால் மட்டும் ஓ.கே. சொல்வார்கள். அவர்? மணிரத்னம். பல ஹீரோக்களின் லட்சியமாகவே இருக்கும் மணிரத்னம், விக்ரமை வில்லனாக்கியிருக்கிறார்.
விக்ரம் ரசிகர்கள் அதிர வேண்டாம். சீயானின் வில்லன் வேஷம் இங்கல்ல, இந்தியில்! ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ். இதே படத்தை இந்தியில் ராவணன் என்ற பெயரில் இயக்குகிறார் மணி. இதில்தான் வில்லனாக நடிக்கிறாராம் விக்ரம்.
இது ஒருபுறம் இருக்க, மணிரத்னம் படம் என்றாலே இரவுக் காட்சிகளில் நிஜமாகவே சிம்னி விளக்கை கொளுத்திக்கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். ஒன்றுமே தெரியாது என்றொரு விமர்சனம். இந்த விமர்சனத்தை வாங்கிக் கொடுத்த வள்ளல் சாட்சாத் பி.சி. ஸ்ரீராம் என்றாலும், இந்த ராமாயணத்தில் 80 சதவீதக் காட்சிகள் இருட்டிலேயே நடைபெறுகின்றனவாம். படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் என்பதால் பளிச்சென்று பிம்பம் தெரிவது உத்திரவாதம்.