கந்தசாமிக்கும், வில்லுக்கும் கிலி பிடிக்க வைத்துவிட்டார் தேவி ஸ்ரீ பிரசாத். பொதுவாகவே இரு மாநில வசூலை அள்ள நினைக்கும் தயாரிப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்வார்கள். தெலுங்கு தேசத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருக்கும் இவர், கந்தசாமிக்கும், வில்லுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார்.
படப்பிடிப்புகள் வேக வேகமாக நடந்துவரும் நேரத்தில், விருட்டென்று புறப்பட்டு லண்டன் போய்விட்டார் பிரசாத். அதுவும் மொத்தமாக 22 நாட்கள். அதிர்ந்துபோன இரண்டு படத்தின் இயக்குனர்களும் லண்டனுக்கே போன் போட்டு அவரை அரித்து எடுத்ததில், அவசரம் அவசரமாக இந்தியா திரும்பிவிட்டாராம். வந்ததில் இருந்து இந்த இரண்டு பட வேலைகளையும் வேக வேகமாகச் செய்து வருகிறாராம்.
ஆனாலும் இவரது அலட்சியத்தைப் பற்களைக் கடித்தவாறே சபித்துக் கொண்டிருக்கிறார்களாம் பிரபு தேவாவும், சுசி கணேசனும்.