இந்திப் படங்கள் மாதிரி இரண்டு அல்லது முன்று ஹீரோக்கள் சேர்ந்து நடித்தால் இன்டஸ்ட்ரி ஆரோக்கியமாக இருக்கும். இப்படியெல்லாம் பேட்டிகளில் அள்ளிவிடும் ஹீரோக்களிடம், அதே மாதிரி ஒரு கதையைச் சொன்னால், மாடியிலிருந்து தள்ளியே விடுவார்கள்.
ஆனாலும் இரண்டாம் நிலை ஹீரோக்கள் அதற்குத் தயாராக இருப்பதுதான் இப்போதைய ஆறுதல். நடிகர் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம். இவர்களைப் போலவே சத்யராஜின் வாரிசு சிபிராஜும், பிரசன்னாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கச் சம்மதித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை மிஷ்கினின் உதவியாளர் ஒருவர் இயக்கவிருக்கிறார்.
சம்பளத்தைப் பொறுத்தவரை இருவருக்கும் ஒரே தொகையை கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். சம்பள விஷயத்தில் ஈகோ வந்து கடைசியில் ஜகா வாங்கிவிடக் கூடாதல்லவா? அதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை.