2006-ல் ஆஸ்கார் விருது பெற்ற சோத்சி என்ற படத்தை தழுவிதான் யோகி எடுக்கப்பட்டு வருவதாகக் கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியிருக்கிறது. இப்படிக் காப்பியடித்து படம் எடுக்கிற அளவுக்கு மைண்ட் வீக் ஆனவர் அல்ல அமீர் என்றாலும், இந்தக் கதையை முதலில் அவரிடம் சொன்னவர் சுப்ரமணிய சிவாதானே என்று செய்திக்கு ஆதாரம் தருக்கிறார்கள் கோலிவுட்டில்.
குடிசைப் பகுதியில் வசிக்கும் நான்கு இளைஞர்களை பற்றிய கதைதான் அது. அதை அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், வேறு பல புதிய சமாச்சாரங்களைச் சேர்த்துத் தனது படமாக ஆக்கிவிடுவார் அமீர் என்கிறார்கள். வழக்கம்போல இதை ஹிட் படமாக்க என்னவெல்லாம் சூத்திரம் உண்டோ , அதற்காக அதிக நேரத்தைச் செலவிடுகிறாராம் அமீர்.
இயக்கம் சுப்ரமணிய சிவா என்றாலும், ஸ்டார்ட் கட் சொல்வது மட்டும்தான் சிவாவின் வேலை. மற்றதெல்லாம் அமீருடையது என்று கூடவே வேறொன்றையும் கொளுத்திப் போடுகிறார்கள். அதானே பார்த்தோம்...