அப்பா ஆஞ்சநேயரின் பக்தர் என்றாலும் சிம்புவின் கழுத்தை அலங்கரிக்கிறது சிலுவை போட்ட டாலர். அட, அவங்க அம்மா உஷாதான் கிறிஸ்தவராச்சே? இதுக்கு ஏதாவது புதுக் கதையைக் கிளப்புவாங்களே என்று கேட்பவர்களுக்கு, இது கதையல்ல...நிஜம்!
சிம்புவும், நயன்தாராவும் ஒன்றாகச் சுற்றியபோது அன்பாகக் கொடுத்தாராம் நயன். இவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் இந்தச் சிலுவையோடு போய் வந்த சிம்பு, காதல் தோல்விக்குப் பிறகு டாலரைப் பயன்படுத்தாமலே இருந்தார். இப்போது கொஞ்ச நாட்களாக இந்தச் சிலுவை மீண்டும் அம்பலத்தில் ஏறியிருக்கிறது. விழாக்களில் புகைப்படம் எடுக்கும்போதும், டி.வி கேமிராவில் பிடிக்கும்போதும், சிலுவை விழட்டும். அது நயனின் மனசைத் தொடட்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படியெல்லாம் நடக்கிறார் என்று சிம்புவின் செயலுக்கு விளக்கம் தருகிறார்கள்.
ஹீரோ, ஹீரோயின்கள் என்ன செய்தாலும் அதற்கு பில்டப் கொடுக்கவென்றே ஒரு கோஷ்டி அலைகிறது போலும்.