வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றே சொல்லிவந்த தனம் சங்கீதா, முதன் முறையாக மனதைத் திறந்திருக்கிறார். தான் ஒருவரைக் காதலிப்பதாகவும், அவர் சினிமாவுக்குத் தொடர்பில்லாதவர் என்று கூறியிருக்கிறார். தனது வீட்டில் சம்மதம் தெரிவிக்கப்பட்டாலும், பிள்ளை வீட்டில் சம்மதம் இல்லையாம். இருவரும் காத்திருக்கிறோம். இரு வீட்டார் சம்மதம் இல்லையென்றால் இந்தத் திருமணமே இல்லை என்கிறார் திட்டவட்டமாக.
இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற திகைப்பிலேயே கால்ஷீட் கேட்டு யாரும் வருவதில்லையாம். அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை சங்கீதா.
இதற்கிடையில் தனது நீண்ட காலத் தோழி மகேஸ்வரியின் திருமணத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தது சங்கீதாதானாம். திருமண வீட்டில் "நீ எப்படியம்மா விருந்து போட போறே?" என்று நச்சரித்த உறவுக்காரர்களிடம் "ரொம்ப சீக்கிரம்" என்று சொல்லிவிட்டு வந்தாராம்.