|
இந்தப்
பெயர்ச்சி மூலம், 6இல் இருந்து சனி 7ஆம் இடத்திற்கு மாறுகிறார். விறுவிறுவென்று
சென்று கொண்டிருந்த விஷயங்களில் சற்றே தேக்கம் காணப்படும். மாணவர்கள் சில்லறைத்
தொந்தரவுகள் உங்கள் கவனத்தைச் சிதற இடம் கொடுக்க வேண்டாம். நினைத்த இலக்கை
அடையும் வரை கலைஞர்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. வியாபாரிகள்,
தான் எடுக்கும் முயற்சிகள் கை கூடுவதற்கான சூழ்நிலையைப் புத்திசாலித்தனமாகப்
பயன்படுத்திக்கொண்டால், வியாபார உலகில் உங்கள் பெயரை தக்க வைத்துக் கொள்ளலாம்.
பிறருக்குப் பணம் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். அப்படியே
கொடுத்தாலும், கொடுத்த பணம் கைக்கு வராமல் அதோ இதோ என இழுத்துக் கொண்டே
இருக்கும்.
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: :கடின உழைப்பு மற்றும் நேர்மை.
|