சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்து படகுகள், மீன்களை பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்திய கடல் எல்லையில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினத்தில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 2 படகுகளில் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தது தெரியவந்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் 2 படகுகளில் இருந்த 9 மீனவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 9 பேரும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)