சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
தமிழக பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான கூடுதல் அரிசியை மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற்று கோவையில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான கூடுதல் அரிசியை மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)