தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் வேகமாக ‌நிர‌ம்‌பி வரு‌ம் அணைக‌ள்

 
 தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் வேகமாக ‌நிர‌ம்‌பி வரு‌ம் அணைக‌ள்

செ‌ன்னை, நவ.7 (டிஎன்எஸ்)

தொட‌ர் மழை காரணமாக தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள பாபநாச‌ம், ம‌ணிமு‌த்தாறு, சே‌ர்வலாறு உ‌ள்பட ப‌ல்வேறு அணைக‌ள் வேகமாக ‌நிர‌ம்‌பி வரு‌கி‌ன்றன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள‌ப் பெரு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆ‌ட்‌சிய‌ர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து‌ள்ளது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 92.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்துள்ளது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 98.09 அடியாக இருந்தது. இன்று இது 117.62 அடியாக உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 74 அடியாக இருந்தது. இன்று 83.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,765 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை நீடிப்பதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் மேலும் உயர‌க் கூடு‌ம்.

மாவட்டத்தில் உள்ள இதர அணைகளில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை 83 அடியை எட்டி நிரம்பியுள்ளது. இந்த அணைக்கு வரும் 2,273 கன அடி தண்ணீர் அப்படியே ஆற்றில் விடப்பட்டுள்ளது.

இதே போல் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை 82 அடியாக நிரம்பியுள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை 70.21 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே முழுகொள்ளளவான 36.10 அடியை எட்டியுள்ளது.

132.2 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை 95 அடியாக உயர்ந்துள்ளது. இதே போல் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை 25 அடியாகவும், 23.60 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணை 10.50 அடியாகவும், 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடு முடியாறு அணை 39.50 அடியாகவும் உயர்ந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக 15 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் மூழ்கி ‌கிட‌க்க‌ி‌ன்றன. தூத்துக்குடி நகரில் தொடர்ச்சியாக 7 மணி நேரம் மழை பெய்தது. ஒரே நாள் இரவில் 171.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடியில் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடுவது நேற்று நிறுத்தப்பட்டது. அனைத்து அணைகளும் மூடப்பட்டிருந்தன. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1547 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையிலும் வினாடிக்கு 574 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேற்கு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் நீர்தேங்கி உ‌ள்ளதா‌ல் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டு‌ள்ளது.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments


V. Ramaswamy, Singapore
எத்தனை மழை பெய்தால் என்ன, எத்தனை அணைகள் நிரம்பினால் என்ன? எல்லா நீரும் வீணாகி கடலில் கலக்கும் நிலை தானே? மழைக் காலம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் தண்ணீருக்காகத் திருவோடு ஏந்தும் நிலையில் தானே உள்ளோம்? நல்ல திட்டங்கள் மூலம் (வல்லுநர்கள் உதவியுடன்) வான் அளிக்கும் அமுத நீரை எல்லா ஊர்களிலும் சேர்த்து வைக்கவும், சிக்கனமாக உபயோகிக்கவும் தெரிந்தாலே நம் தேவைக்கு அதிகமாகவே நீர் இருக்கும். சாரி, இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? நமக்குத் தான் சுரண்டலுக்கே நேரம் போதவில்லையே. அதற்கான திட்டங்கள் தீட்டுவதிலேயே நேரம் போய்விடுகிறது. ம்..ம்..ம்.. நல்லவேளை, மக்கள் ஓட்டுப் போட்டவுடன் (பணம் வாங்கியோ, வாங்காமலோ) எல்லாம் மறந்துவிடுவார்கள். வளர்க அவர்கள் மறதி.
13 Nov 2009 12:46 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MAKARA MAKARA : It would be a good day if you keep all your communications clear and free ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:42 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.