
சென்னை, பிப் 4(டிஎன்எஸ்) சென்னையில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
52 வயதான வேலுச்சாமி என்பவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் மதுரை அருகே உள்ள கோதனேரி என்ற இடத்தை சேர்ந்தவர். சென்னை வடபழனி பிள்ளையார் கோயில் தெருவில் இவருக்கு சொந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டில் அவர் வசித்து வந்தார்.
வேலுச்சாமியை பிப்-4 அன்று காலை வடிவேலு வீட்டிலிருந்து தொடர்பு கொள்ள முயற்சித்ததகாவும், போனை எடுக்கப்படாததால், அருகில் உள்ள ஒருவருக்கு போன் செய்து, வேலுச்சாமி வீட்டுக்கு சென்று பார்க்குமாறும் நடிகர் வடிவேலு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் சென்று பார்த்தபோது முதல் மாடியில் வேலுச்சாமி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வடிவேலுவுக்கு தகவல் தெரிவித்து விட்டு, போலீசாருக்கும் தெரியப்படுத்தினர். தனது உதவியாளருடன் நடிகர் வடிவேலு அங்கு வந்தார். வடபழனி காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விரைந்து வந்து வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலுச்சாமி சர்க்கரை நோயாளி. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டி ருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (டிஎன்எஸ்)
Feb 04, 2009
* Do not use semicolon(;)