டெஹ்ரான், நவ.4 (டிஎன்எஸ்)
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் காயமடைந்தனர்.
ஹார்மோஸ்கான் மாநிலத்தில் உள்ள தெற்கு துறைமுக நகரான பாந்தர் அப்பாஸ் என்ற நகரில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 1,367 கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 700பேர் காயமடைந்தனர். உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
(டிஎன்எஸ்)
Nov 04, 2009
* Do not use semicolon(;)