ஜம்மு, நவ.5 (டிஎன்எஸ்)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு மொபைல் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் ஃபரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக ப. சிதம்பரத்துடன் நேற்று ஃபரூக் அப்துல்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரீபெய்டு சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், காஷ்மீர் மாநில மக்கள் கோபம் அடைந்திருப்பதாக பரூக் அப்துல்லா கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரீபெய்டு சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்றும், பாதுகாப்பு குறித்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சிதம்பரம், அப்துல்லாவிடம் எடுத்துக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)